திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மின்சார இரயிலில் படிக்கட்டில் தொங்கியவாறு ஆபத்து பயணம்.. 22 வயது இளைஞர் பரிதாப மரணம்..! கண்ணீர் சோகம்.!
வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்லும்போது, கூட்ட நெரிசலால் மின்சார இரயில் படிக்கட்டில் பயணம் செய்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை நலசோபர் பகுதியை சேர்ந்த இளைஞர் ரத்தன் விஸ்வகர்மா (வயது 22). இவர் நேற்று இரவு பணிக்கு சென்றுவிட்டு, அந்தேரியில் இருந்து நலசோபர் செல்ல புறநகர் மின்சார இரயிலில் பயணம் செய்துள்ளார்.
இந்த இரயில் மலாட் - கோரேகான் இரயில் நிலையங்களுக்கு இடையே பயணம் செய்தபோது, கூட்ட நெரிசலால் இரயில் படிக்கட்டில் ஆபத்தான வகையில் பயணம் செய்த ரத்தன் விஸ்வகர்மா, இரயிலில் இருந்து கீழே விழுந்துள்ளார்.
இந்த விபத்தில், ரத்தன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற இரயில்வே காவல் துறையினர், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.