திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
1 பெண்., 7 பேர்.. அந்த அறையில் நடந்த பகீர் சம்பவம்.. பதறிப்போன அதிகாரிகள்.. சட்டவிரோதமாக பயங்கரம்.!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஜல்னா மாவட்டத்தில் சட்டவிரோத கருக்கலைப்பு மையம் செய்யப்பட்டு வந்துள்ளது. இந்த கருக்கலைப்பு மையத்தின் மூலமாக சிசுக்கொலைகள் அதிகளவில் நடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் நடத்திய சோதனையில், சட்டவிரோத கருக்கலைப்பு மையம் செயல்படுவது உறுதியானது. இதனையடுத்து, 7 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
மேலும், கருக்கலைப்புக்கு அனுமதியாகிருந்த பெண் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். மருத்துவமனையில் இருந்த மாத்திரைகள், கருக்கலைப்பு சாதனங்கள் போன்றவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த கும்பல் சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்ய விரும்புவோரிடம் ரூ.40 ஆயிரம் பணம் வாங்கியதும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.