மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பாழடைந்த காருக்குள் ஏறி விளையாடிய சிறார்கள் பரிதாப பலி; அண்ணா-தம்பிக்கு நடந்த சோகம்..!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, ஆண்டோ ஹில் பகுதியில் அசித்து வருபவரின் மகன்கள் முஸ்கான் மொகமது ஷேக் (வயது 5), முகமது ஷேக் (வயது 7).
சகோதரர்களான இருவரு சம்பவத்தன்று தங்களின் வீட்டுப்பகுதியில் கேட்பார் இன்றி நெடுநாட்களாக நிறுத்தப்பட்டு இருந்த காரில் அமர்ந்து விளையாடிக்கொண்டு இருந்துள்ளனர்.
சிறுவர்கள் வீட்டின் வாசலில் விளையாடுவார்கள் என பெற்றோர் கண்டுகொள்ளாமல் இருக்க, பூட்டிய காரில் விளையாடிய சிறார்கள் இருவரும் மயங்கி உயிரிழந்துள்ளனர்.
பிள்ளைகளை காணாது தேடிய பெற்றோர், காரின் உட்புறம் இருந்த சிறார்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றபோது மரணம் உறுதி செய்யப்பட்டது.
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், சிறார்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.