மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: கண்ணிமைக்கும் நேரத்தில் சோகம்; கனரக லாரி அடுத்தடுத்து மோதி விபத்து.. 15 பேர் உடல் நசுங்கி பலி, 28 பேர் படுகாயம்.!
ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனத்தால், முன்னால் சென்ற வாகனங்கள் மீது பாரம் ஏற்றிய லாரி மோதிய விபத்தில் 28 பேர் படுகாயம் அடைந்தனர். 15 பேர் பலியாகினர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள துலே மாவட்டம், சிர்பூர் தாலுகா பகுதியில் இருக்கும் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் இன்று சென்றுகொண்டு இருந்தன.
அப்போது, பாரம் ஏற்றிய கனரக லாரி, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்றுகொண்டு இருந்த வாகனங்கள் மீது பயங்கரமாக மோதி விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் மொத்தமாக 15 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர். 28 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தனர்.
தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் & மீட்பு படையினர், துரிதமாக செயல்பட்டு உயிருக்கு போராடியவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர். விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
VIDEO | At least 15 people reportedly killed in an accident involving a truck and several vehicles on the Mumbai-Agra Highway in Dhule, Maharashtra. pic.twitter.com/49JmnBSUJs
— Press Trust of India (@PTI_News) July 4, 2023