மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஜாதிவிட்டு ஜாதி காதல்.. மருத்துவக்கல்லூரி மாணவி எரித்து கொலை.. தந்தை, தாய்மாமா பரபரப்பு வாக்குமூலம்.!
அன்பு மகள் வேறுசாதி இளைஞரை காதலித்த தகவல் அறிந்து திருமணத்திற்கு ஏற்படு செய்த பெற்றோர், அது நின்றுபோனதால் மகளை கொன்று சாம்பலை ஆற்றில் கரைத்த சம்பவம் நடந்துள்ளது.
மஹாராஷ்ட்ரா மாநிலம், நான்டேட் மஹிபா கிராமத்தை சேர்ந்த மருத்துவக்கல்லூரி மாணவி சுபாங்கி, தனது கிராமத்தை சேர்ந்த தருண் என்ற இளைஞரோடு காதல் வயப்பட்டுள்ளார்.
மகளின் காதல் விவகாரம் சுபாங்கியின் பெற்றோருக்கு தெரியவந்த காரணத்தால், அவர்கள் மகளுக்கு வேறொரு இளைஞருடன் திருமணம் செய்ய ஏற்பாடுகளை செய்தனர். திருமணத்திற்கு முன்பு ஊர் மக்கள் முன்னிலையில் சுபாங்கி காதல் குறித்து தெரிவித்ததால், அவர்கள் சுபாங்கியின் பெற்றோரை கண்டித்து புறப்பட்டு சென்றனர்.
திருமணத்தின் போது மகள் இப்படி செய்துவிட்டார் என ஆத்திரமடைந்த பெற்றோரில் தந்தை, சுபாங்கியின் தாய்மாமா உட்பட 5 பேர் சேர்ந்து அவரை அடித்து கொலை செய்துள்ளனர்.
பின்னர், அவரின் உடலை தீயிட்டு எரித்து, அதன் சாம்பலை அங்குள்ள ஆற்றில் வீசிவிட்டு வந்துள்ளனர். ஊர் மக்கள் மாணவி சுபாங்கி குறித்த தகவல் அறியாமல், இறுதியில் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் சுபாங்கியின் தந்தை, தாய்மாமா ஆகியோரிடம் நடத்திய விசாரணையில் உண்மை அம்பலமாக, 5 பேரை கைதி செய்து சிறையில் அடைத்தனர்.