#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சிறுமி பாலியல் பலாத்காரம்..! குற்றவாளியான கிழவன் கொலை., "பாதிக்கப்பட்டவர்கள்" ரிவெஞ்சில் பரபரப்பு சம்பவம்?.!!
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சமையலறை, சிறுமிக்கு உறவினர்களான 2 பேர் கொலை செய்த சம்பவம் மும்பை அருகே நடந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை மன்குர்த் பகுதியில், 15 வயதுடைய சிறுமி வசித்து வருகிறார். சம்பவத்தன்று, சிறுமியை அப்பகுதியை சார்ந்த 69 வயது சமையலர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இந்த விஷயம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், சமையலர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், சமையலரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
சமையலர் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்கள் 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சிறுமி சமையலரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் அவர் கொலை செய்யப்பட்டுள்ளாரா? என விசாரணை நடந்து வருகிறது.
Maharashtra: Two people have been arrested for allegedly beating their cook (69) to death on suspicion of molesting a girl in Mankhurd area of Mumbai, say police
— ANI (@ANI) January 3, 2022