மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கணவனின் அனுமதியுடன் மனைவியை பலாத்காரம் செய்த 2 நண்பர்கள்: வீட்டு வாடகை பணத்திற்காக நடந்த அவலம்.!
வேலைவெட்டிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்த கணவன், மனைவியை நண்பர்களுக்கு பணத்திற்காக பலாத்காரம் செய்ய அனுமதித்த பயங்கரம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, சங்கிலி பகுதியில் 23 வயதுடைய பெண்மணி தனது கணவருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் பெண்ணின் கணவர் தனது மனைவியை அழைத்துச் சென்று 2 நபர்கள் பலாத்காரம் செய்வதற்கு அனுமதி வழங்கியதாக தெரிய வருகிறது.
கடந்த டிசம்பர் மாதம் 9-ஆம் தேதி மற்றும் 10-ஆம் தேதி அங்குள்ள ராமாபாய் காலனி பகுதிக்கு மனைவியை இரவு நேரத்தில் அழைத்துச் சென்றவர், இரண்டு நபர்கள் மனைவியை பலாத்காரம் செய்ய அனுமதி வழங்கியுள்ளார்.
இரு நபர்களும் ரூ.5000 தருவதாக கூறியதால் கணவர் ஒப்புக்கொண்டுள்ளார். டிசம்பர் மாதம் 10-ஆம் தேதி காவல்துறையினர் நடத்திய விசாரணையில், தாங்கள் தங்கி இருக்கும் வீட்டிற்கு வாடகை பணம் கொடுக்க இவ்வாறான செயலில் நண்பர்கள் மூலமாகவே கணவன் கொடூரம் செய்தது தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்மணி காவல் நிலையத்தில் புகாரளிக்கவே, புகாரை ஏற்ற காவல்துறையினர் விசாரணை நடத்தி தலைமறைவான பெண்ணின் கணவர் மற்றும் அவரது இரண்டு நண்பர்களை நேற்று கைது செய்தனர்.