திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஆண் நண்பருடன் விடுதியில் இருந்த பெண் மர்ம மரணம்.. நடந்தது என்ன?.. பதறிய ஊழியர்கள்..!
விடுதியில் ஆணுடன் தங்கியிருந்த பெண்மணி மர்ம மரணமடைMந்த விவகாரத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, மளாடு அக்சா கடற்கரையில் தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதிக்கு கடந்த 11 ஆம் தேதி மாலை நேரத்தில் 47 வயது பெண்மணி ஆணொருவருடன் வந்துள்ளார். இருவரும் அறையெடுத்து தங்கியிருந்த நிலையில், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை கவனித்த விடுதி ஊழியர்கள் இருவரையும் சமாதானம் செய்து வைத்தனர்.
இந்நிலையில், நேற்று காலை பெண்ணுடன் இருந்தவர் வெளியே சென்றுவிட, பெண் விடுதியில் இருந்துள்ளார். அவரின் அறைக்கான நேரம் முடிவடைய, விடுதி ஊழியர்கள் கதவை தட்டியும் திறக்கவில்லை. இதனையடுத்து, காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
அப்போது, பெண்மணி மயங்கிய நிலையில் இருக்கவே, அவரை மீட்ட அதிகாரிகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி செய்தனர். மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில் பெண் உயிரிழந்தது உறுதியாகவே, அவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு விசாரணை நடத்தி வரும் காவல் துறையினர், பெண்ணின் ஆண் நண்பருக்கு வலைவீசியுள்ளனர்.