தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
15 வயது 7 மாத சிறுமியின் கர்ப்பத்தை கலைக்க நீதிமன்றம் அனுமதி மறுப்பு; காரணம் என்ன தெரியுமா?.!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை அவுரங்காபாத் கிளை நீதிமன்றத்தில், பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியின் தாய் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தனது 15 வயது மகள் பிப்ரவரி மாதம் காணாமல் போன நிலையில் காவல் நிலையத்தில் புகார் அளித்தோம்.
விசாரணையில் அவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த நபருடன் வசித்து வருவது கண்டறியப்பட்டு அவர் மீட்கப்பட்டார். மகள் மீட்கப்படும்போது அவர் கர்ப்பமாக இருந்த நிலையில், மொத்தமாக அவர்கள் தற்போது ஏழாவது மாத கர்ப்பமாக இருக்கிறார்.
கற்பழிப்பு காரணமாக பாதிக்கப்பட்ட அவளின் கருவை கலைக்க அனுமதி வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இந்த மனு குறித்து நீதிபதிகள் மருத்துவ ஆலோசனை கேட்டு இருந்தனர். இன்று மருத்துவ குழு பரிந்துரை அனுப்பி வைக்கப்பட்டது.
அதன்படி, "சிறுமி 28 வார கர்ப்பமாக இருக்கும் காரணத்தால், கருக்கலைப்பு நடவடிக்கையின் போது குழந்தை உயிருடன் பிறக்க வாய்ப்பு இருக்கிறது. அது தாய்க்கும் ஆபத்தாக இருக்கலாம். இதனால் கர்ப்பத்தை கலைக்க அனுமதி வழங்க இயலாது. குழந்தையை பெற்றெடுத்த பின்னர் குழந்தையை தத்து கொடுக்க வாய்ப்புள்ளது என்பதால், சிறுமியை காப்பகத்தில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளனர்.