மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பார்சல் டெலிவரி பெயரில் மருத்துவரிடம் இலட்சக்கணக்கில் மோசடி.. ரூ.2 கணக்கில் பலே வேலை..!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை டாடா மெமோரியல் மருத்துவமனையில், மருத்துவராக பணியாற்றி வருபவர் பன்சரி ஷா (வயது 29). இவர் குஜராத் மாநிலத்திற்ற்கு கூரியர் அனுப்ப வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, கூரியரை அனுப்பி வைத்த நிலையில், அந்த பார்சல் பெறப்படவில்லை. கூரியர் நிறுவனத்திற்கு தொடர்பு கொண்டு கேட்கையில், அவர்கள் முதலில் மறுநாள் அதனை டெலிவரி செய்வதாக தெரிவித்துள்ளனர்.
பின்னர், மறுநாளில் தொடர்பு கொண்டு கேட்கையில், ரூ.2 கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். அதன்படி, நிறுவனம் சார்பில் கொடுக்கப்பட்ட இணையத்தில் சென்று பணம் செலுத்தியுள்ளனர்.
ஆனால், அவரது வங்கிக்கணக்கை சோதனை செய்கையில், ரூ.2 இலட்சம் பணம் எடுக்கப்பட்டுள்ளது உறுதியானது. இதனையடுத்து, மருத்துவர் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.