திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
வேலைக்கு செல்லாததால் கிண்டலடித்த தந்தை.. இரும்பு கம்பியால் துடிதுடிக்க அடித்தே கொன்ற மகன்.!!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, அந்தேரி பகுதியைச் சேர்ந்த 53 வயது நபர், இந்தி நடிகருக்கு ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 24 வயதில் மகன் இருக்கின்றார்.
தனது மகன் எந்த வேலைக்கும் செல்லாமல் ஊர் சுற்றிக் கொண்டிருந்த நிலையில், அதனை தந்தை கண்டித்து இருக்கிறார். மேலும், ஏதாவது வேலைக்கு செல்லும் படியும் கூறி இருக்கிறார்.
இந்நிலையில், வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வரும் தன்னை தந்தை கிண்டல் அடித்து வேலைக்கு செல்ல வற்புறுத்துவதாக ஆத்திரமடைந்த மகன், தந்தையை இரும்பு கம்பியால் கடுமையாக தாக்கியுள்ளார்.
இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூன்று நாட்களில், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், சம்பந்தப்பட்ட நபரின் மகனை கைது செய்தனர்.