மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கண்ணாடி பாட்டிலில் பட்டாசு வெடித்த சில்வண்டுகள்.. தட்டிக்கேட்டவரை கண்ணாடியால் குத்தி கொன்ற 15 வயது சிறுவன்.!
பட்டாசு வெடித்ததை தட்டிக்கேட்ட இளைஞர் 15 வயது சிறுவனால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள மும்பை, சிவாஜி நகர் பகுதியில் இருக்கும் திறந்த வெளியில் 12 வயதுடைய சிறுவன் கண்ணாடி பாட்டிலுக்குள் பட்டாசுகளை வைத்து வெடித்துக்கொண்டு இருந்துள்ளான்.
அப்போது, அவ்வழியே சென்ற மூதாட்டி சிறுவனின் செயல்பாடுகளை கண்டு கண்டித்து இருக்கிறார். மேலும், அதே பகுதியை சேர்ந்த சுனில் நாயுடு (வயது 21) என்பவரும் பட்டாசினை வெடிக்க கூடாது என கூறியுள்ளார்.
சிறுவனுக்கு ஆதரவாக 2 சிறார்கள் என அவர்களுக்கும், சுனிலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதத்தின் போது 15 வயது சிறுவன் ஆத்திரமடைந்து சுனில் நாயுடுவை கண்ணாடி பாட்டிலால் தாக்கி குத்தியுள்ளான்.
இதனால் பாதிக்கப்பட்ட சுனிலை மீட்ட அக்கம் பக்கத்தினர், சிகிச்சைக்காக அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிந்த காவல் துறையினர் 2 சிறார்களை கைது செய்தனர்.