மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
13 வயது சிறுமியை ஆபாச படம் பார்த்து சீரழித்த சகோதரர்கள்; கர்ப்பமானதால் அம்பலமானது அதிர்ச்சி உண்மை.!
ஒவ்வொரு பெற்றோரும் தங்களின் குழந்தைகளுக்கு (ஆண், பெண்) பாலியல் விவகாரங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது இந்த செய்தித்தொகுப்பு.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, விக்ரொலி பகுதியில் 13 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். சிறுமியின் பெற்றோர் இருவரும் வேலை பார்த்து வருவதால், காலையில் வேலைக்கு சென்றால் மீண்டும் இரவே வீடு திரும்புவார்கள்.
இதனால் சிறுமி நாள் முழுவதும், பள்ளிக்கூட நாட்கள் தவிர்த்து வீட்டில் தனியே இருப்பார். இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் சிறுமியை அவரின் உறவினர்களான 18 வயது சகோதரர், 22 வயது இளைஞர் ஆகியோர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
சிறுமி தனியாக இருப்பதை தனக்கு முழுக்க சாதகமாக்கி, ஆபாச படம் பார்த்து கற்பழிப்பு செயலை இருவரும் அரங்கேற்றி இருக்கின்றனர். ஆகஸ்டில் தொடங்கிய அதிர்ச்சி செயல், கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை தொடர்ந்து இருக்கிறது.
இதனிடையே, சிறுமி கர்ப்பமாகி, அவரின் வயிறு பெரிதாக தொடங்கியுள்ளது. இது பெற்றோருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தவே, அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு மகளை அழைத்துச்சென்று பரிசோதனை செய்துள்ளனர்.
அப்போது, சிறுமி கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. மேலும், விசாரணையில் சிறுமியின் சகோதரர் உறவுமுறை கொண்டவர்கள் செய்த கொடுமை தெரியவந்தது. இவர்கள் ஆபாச படம் பார்த்து, அதன் பின்னரே சிறுமியை பலவந்தப்படுத்தி பலாத்காரம் செய்துள்ளனர்.
சிறுமியின் அறியாமை, தனிமை ஆகியவற்றை பயன்படுத்தி முதலில் நல்லவர்கள் போல பேசிய இருவரும், சிறுமியின் பெற்றோரிடமும் நல்லவர்களாக நடித்து இத்துயரத்தை நிகழ்த்தி இருக்கின்றனர். தற்போது இவ்விவகாரம் குறித்து பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்தனர்.
இவர்களின் மீது போக்ஸோ சட்டம் பாய்ச்சப்பட்டுள்ளது.