மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆண் குழந்தை வேண்டி அனுதினம் கொடுமை: மாமியார், மருத்துவரான கணவருக்கு எதிராக புகாரளித்த மனைவி.!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நவி மும்பை பகுதியை சேர்ந்தவர் விவேக் யாதவ் (வயது 49). இவர் தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர்களுடன் விவேக்கின் தயார் மகாதேவி ஜைபால்சிங் யாதவும் (வயது 70) வசித்து வருகிறார்.
மருத்துவராக பணியாற்றி வரும் விவேக்கிற்கு, கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், பெண் குழந்தை பிறந்ததாக தெரியவருகிறது.
விவேக்கின் தாயார் தனது மருமகளிடம் ஆண் குழந்தை வேண்டும் என பலமுறை தொந்தரவு செய்து வந்துள்ளார். மேலும், குடும்ப ரீதியாக தம்பதிகளிடையே பிரச்சனையையும் உண்டு செய்துள்ளார்.
கடந்த 2009ம் ஆண்டு முதல் 2022 வரையில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் என பல இடங்களுக்கு அழைத்துச்சென்று ஆண் குழந்தை வேண்டி சிகிச்சையும் எடுத்துக்கொள்ள வைத்து கொடுமை செய்துள்ளனர். ஆனால் பெண் குழந்தையே பிறந்துள்ளது.
இதனால் மருமகளின் மீது மாமியார் வெறுப்புகளை அள்ளி வீசவே, மருமகள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 498A, 323 மற்றும் 504 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசர்நாய் நடத்தி வருகின்றனர். தற்போது வரை யாரும் கைது செய்யப்படவில்லை.