மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
NH Accident Video: 7 பேரின் உயிரை லாரி காவு வாங்கியது எப்படி?.. அதிர்ச்சி சி.சி.டி.வி வீடியோ வெளியானது.. பதைபதைக்க வைக்கும் காட்சிகள்.!
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்தின் பதைபதைப்பு வீடியோ வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள துலே மாவட்டத்தின், மகாராஷ்டிரா தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை பயங்கர விபத்து ஏற்பட்டது.
கனரக லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, முன்னால் சென்ற கார் உட்பட சில வாகனங்கள் மீது மோதி பயங்கர விபத்தை சந்தித்தது.
இந்த விபத்தில் லாரியின் வேகத்தால் விபத்திற்குள்ளதானதும் தறிகெட்டு இயங்கிய கார், சாலையோர உணவகத்திற்கு அருகே சென்று மோதி நின்றது.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த சாலை விபத்தில் 7 பேர் பரிதாபமாக பலியாகினர். 28 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த பதைபதைப்பு சம்பவம் அங்குள்ள சி.சி.டி.வி கேமிராவில் பதிவாகியுள்ளது. அந்த காட்சியும் இணைக்கப்பட்டுள்ளது.
#WATCH | CCTV visuals of the accident in Dhule, Maharashtra where seven people have died and 28 others got injured. The accident took place in Shirpur taluka of Dhule district, earlier today. pic.twitter.com/zfGtyvWEmo
— ANI (@ANI) July 4, 2023