திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
#BigNews: 10 வயது பச்சிளம் சிறுமி பாலியல் பலாத்காரம்.. முஸ்லீம் மதகுரு பரபரப்பு கைது.! அரங்கேறிய கொடூரம்.!!
பள்ளியில் 5 ஆம் வகுப்பு பயின்று வரும் 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில், முஸ்லீம் மதகுரு கைது செய்யப்பட்டுள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பால்கர் மாவட்டம், வசாய் பகுதியில் 10 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறார். சிறுமி அங்குள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இந்நிலையில், சிறுமியிடம் முஸ்லீம் மதகுரு அன்பாக பழகி வந்ததாக தெரியவருகிறது.
இதனால் சிறுமியின் பெற்றோரும் மதகுரு தங்களின் மகளிடம் அன்பாக இருக்கிறார் என நினைத்து மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த நிலையில், சம்பவத்தன்று சிறுமியிடம் முஸ்லீம் மதகுரு பாலியல் ரீதியாக அத்துமீறி இருக்கிறார்.
கயவனின் கொடூரத்தால் பாதிக்கப்பட்ட சிறுமி கண்ணீருடன் வீட்டிற்கு வந்து வயிறு வலிப்பதாக தெரிவித்துள்ளார். பெற்றோர் சிறுமியிடம் விசாரிக்கும்போது உண்மை தெரியவரவே, மகளை மருத்துவமனையில் அனுமதி செய்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
சிறுமிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இந்த விஷயம் தொடர்பாக விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் 10 வயது சிறுமியை பலாத்காரம் செய்த முஸ்லீம் மதகுருவை கைது செய்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்து சிறையில் அடைத்துள்ளனர்.