திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பழங்குடியின இளம்பெண் 2 பேரால் பலாத்காரம்., கொலை மிரட்டல்.. கத்தி முனையில் நடந்த கொடூரம்.!
19 வயது பழங்குடியின இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக 2 பேரை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பாலகர், ஜவஹர் தாலுகாவில் 19 வயதுடைய பழங்குடியின இளம்பெண் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று பெண்மணி வீட்டில் இருந்து வெளியே புறப்பட்டு சென்றுள்ளார்.
அப்போது, வழியில் இடைமறித்த 2 பேர், இளம்பெண்ணை அங்குள்ள தானிய கிட்டங்கி பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு, கத்தி முனையில் இரண்டு பெரும் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
மேலும், இந்த விஷயம் தொடர்பாக வெளியே யாரிடமும் கூறினால், குடும்பத்தோடு கொலை செய்திடுவோம் என்று மிரட்டி சென்றுள்ளனர். இதனால் பயந்துபோன இளம்பெண்ணும் யாரிடமும் கொடூரத்தை தெரிவிக்காமல் இருந்துள்ளார்.
இந்நிலையில், மனவருத்தத்தில் இருந்து வந்த இளம்பெண், ஒருகட்டத்தில் தனது குடும்பத்தினரிடம் நடந்த கொடுமையை தெரிவித்துள்ளார். இதனையடுத்து, காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரை ஏற்ற ஜவஹர் நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து 2 தேடி வருகின்றனர்.