திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஈன்றெடுத்த தாயை ஈவுஇரக்கமின்றி.., மகனால் 70 வயது தாய்க்கு நேர்ந்த கொடுமை.. பரிதாப பலி.. கண்ணீர் துயரம்.!
70 வயதாகும் தாயை மகன் ஈவு இரக்கமின்றி அடித்து கொலை செய்த பயங்கரம் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. குடிகார மகனால் வாக்குவாதத்தில் நிகழ்ந்த கொடூர சம்பவம் அதிரவைத்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பால்கர் மாவட்டம், தாராப்பூரில் வசித்து வருபவர் ரூபேஷ் கஹானி (வயது 39). இவர் மதுபான பழக்கத்திற்கு அடிமையானவர். இவரின் தாய் லலிதா கஹானி (வயது 70). தாயும் மகனும் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்கள்.
இந்நிலையில், சம்பவத்தன்று ரூபேஷுக்கும் - அவரின் தாயாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ரூபேஷ் கஹானி, வீட்டில் இருந்த உருட்டுக்கட்டையை எடுத்து தாயை சரமாரியாக தாக்கி இருக்கிறார்.
இந்த சம்பவத்தில் லலிதா கஹானி நிகழ்விடத்திலேயே மண்டை பிளந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், லலிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, லலிதா கஹானியின் மகனான ரூபேஷை அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.