மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சார்ஜ் ஏறிக்கொண்டிருந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெடித்து 7 வயது சிறுவன் பரிதாப பலி; நெஞ்சை உலுக்கும் சோகம்.!
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சார்ஜ் ஏறிக்கொண்டு இருக்கும் போதே திடீரென வெடித்து சிதறியதில் 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, பால்கர் மாவட்டத்தின் வசாய் மணிக்பூர் பகுதியில் வசித்து வருபவரின் மகன் ஷபீர் அன்சாரி (வயது 7). சம்பவத்தன்று சிறுவனின் தந்தை தனது எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்திற்கு சார்ஜ் போட்டுள்ளார்.
அப்போது, வாகனத்தின் அருகே சிறுவன் ஷபீர் மற்றும் அவனது பாட்டி இருந்துள்ளனர். அந்த சமயத்தில், எதிர்பாராத விதமாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் திடீரென வெடித்து சிதறியுள்ளது.
இந்த விபத்தில், சிறுவன் 70 % தீக்காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்படவே, அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், சிறுவனின் பாட்டி சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.