திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
வேலைவாங்கி தருவதாக ஏமாற்றி, சிறுமி 3 பேரால் கூட்டுப்பாலியல் பலாத்காரம்..!
குடும்ப சூழ்நிலையால் வேலை தேடிய சிறுமியை ஏமாற்றி, 3 பேர் கும்பல் கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்த பயங்கரம் நடந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பால்கர் மட்டத்தில் 17 வயதுடைய சிறுமி வசித்து வருகிறார். சிறுமி குடும்ப சூழ்நிலை காரணமாக வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட நிலையில், இதனை தெரிந்துகொண்ட 3 பேர் சிறுமிக்கு வேலை வாங்கி தருவதாக வாக்குறுதி அளித்துள்ளனர்.
இதனையடுத்து, சிறுமியை நேர்காணலில் கலந்துகொள்ள வேண்டும் என பால்கர் நகருக்கு வரவழைத்த கும்பல், பெண் ஒருவரை ஏற்பாடு செய்து நேர்காணல் போல பாவித்துள்ளனர். சிறுமியை தனி அறையில் வைத்து 3 பேர் சேர்ந்து கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
பின்னர், இதுகுறித்து வெளியே கூறினால் கொலை செய்திடுவோம் என்று மிரட்டி அனுப்பிய நிலையில், சிறுமி காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, சிறுமியை பலாத்காரம் செய்ததாக 39 வயது நபரை கைது செய்துள்ளனர்.
அவரின் வாக்குமூலத்தின் பேரில் 2 பேருக்கு வலைவீசப்பட்டுள்ள நிலையில், குற்றத்திற்கு தேடப்பட்டு வரும் 2 பேரில் ஒருவரின் மனைவியும் உடந்தையாக இருந்தது அம்பலமானது.