திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மழையினால் பரிதாபம்; கால் இடறி மின்பெட்டியின் மீது கைவைத்தவர் மின்சாரம் தாக்கி பலி.!
மழைக்காலங்களில் மின் வழித்தடங்கள் இருக்கும் இடத்தில் நிற்கவோ, நடக்கவோ நேரிட்டால் கவனமாக நடக்க வேண்டும் அல்லது அவை இணைக்கப்பட்டுள்ள இடத்தில் இருந்து 2 அடி தொலைவிலாவது நடந்து செல்வது நமது உயிருக்கு நல்லது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பால்கர் மாவட்டம், நாலாசோப்ரா பகுதியை சேர்ந்தவர் ஆஷிஷ் ஷர்மா (வயது 33). இவர் கடந்த ஜூலை 2ம் தேதி அங்குள்ள கிழக்கு பிரகதி நகர் பகுதியில் நடந்து சென்றுகொண்டு இருந்தார்.
அப்போது, அவர் பயணிக்கும் பாதையில் மழையினால் நீர் தேங்கியிருந்த நிலையில், சாலையோரம் நடந்து சென்றவருக்கு திடீரென கால் இடறியுள்ளது.
இதனால் பிடிமானத்திற்காக அருகே இருந்த மின்சார பெட்டியின் மீது அவர் கைவைத்துள்ளார். அச்சமயம் மழை காரணமாக மின்பெட்டியில் மின்சாரம் பாய்ந்ததாக தெரியவருகிறது.
மின்தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஆஷிஷ் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.