#BigNews: மும்பை - புதுச்சேரி அதிவிரைவு இரயில் தடம்புரண்டு விபத்து..! புறப்பட்ட சில நிமிடங்களில் சோகம்.!!



maharashtra-pondicherry-express-derailed-in-mumbai

தனது பயணத்தை தொடங்கிய சில நிமிடங்களில் புதுச்சேரி அதிவிரைவு வண்டி மும்பை அருகே தடம்புரண்டு விபத்திற்குள்ளானது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் இருந்து புதுச்சேரிக்கு அதிவிரைவு இரயில் சேவை பயன்பாட்டில் உள்ளது. புதுச்சேரி மும்பை இடையே இயக்கப்படும் இரயில் சாளுக்கியா / புதுச்சேரி அதிவிரைவு இரயில் என்று அழைக்கப்படுகிறது. இந்த இரயில், நேற்று மும்பை தாதர் இரயில் நிலையத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி பயணம் செய்த நிலையில், பயணத்தை தொடங்கிய சில நிமிடத்திலேயே விபத்தில் சிக்கியது. 

மாட்டுங்கா இரயில் நிலையத்தை கடந்து வரும் போது புதுச்சேரி அதிவிரைவு இரயில் தடம்புரண்டு மும்பை சி.எஸ்.எம்.டி கடக் அதிவிரைவு இரயிலின் பக்கவாட்டில் மோதியது. இந்த விபத்தில் புதுச்சேரி இரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. இதனையடுத்து, விபத்து தொடர்பாக தகவல் அறிந்த அதிகாரிகள் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

Maharshtra

மேலும், அவ்வழித்தடம் வழியே செல்லும் பிற இரயிகள் இரத்து செய்யப்பட்டது. புறநகர் இரயில் சேவை மட்டும் வழங்கப்பட்டு வருகிறது. புதுச்சேரி அதிவிரைவு இரயில் - மும்பை கடக் அதிவிரைவு இரயில் சேவையும் இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு, பயணிகள் பணத்தை திரும்பி பெற்றுக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.