மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆசனவாயில் காற்றை நிரப்பிய இளைஞர்: பரிதாபமாக உயிரிழந்த 16 வயது சிறுமி.. இப்படியுமா விளையாடுவீங்க?..!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே, ஹாதாப்சர் தொழிற்பேட்டையில் உணவு தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் வேலை பார்த்து வருபவர் தீரஜ் கோபால் சிங் (வயது 21).
இவரது உறவுக்கார சிறுமி மோதிலால் பாபுலால் சாஹு (வயது 16). இருவரும் நட்பாக பழகி வந்ததாக தெரியவருகிறது. சாஹு அவ்வப்போது தனது உறவினர் பணியாற்றி வரும் நிறுவனத்திற்கு வந்து செல்வது இயல்பு என கூறப்படுகிறது.
சம்பவத்தன்று இருவரும் உணவு தயாரிப்பு நிறுவனத்தின் முதல் மாடியில் இருந்த நிலையில், அங்கு விளையாட்டுத்தனமாக சாஹுவின் ஆசனவாயில் தீரஜ் ஏர் ஹோஸ் கொண்டு காற்றடித்ததாக தெரியவருகிறது.
இதனால் சாஹுவின் உடல்நிலை தீவிரமாக பாதிக்கப்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோது, இருவரும் விளையாடிக்கொண்டு இருக்கும்போது அவ்வாறு செய்ததாகவும், இதனால் உயிர் போகும் என தான் நினைக்கவில்லை என்றும் தீரஜ் தெரிவித்துள்ளார்.