மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஏ.டி.எம் இயந்திரத்தை வெடிவைத்து தகர்த்து ரூ.16 இலட்சம் கொள்ளை.. பரபரப்பு சம்பவம்.!
வெடிபொருளை பயன்படுத்தி ஏ.டி.எம் இயந்திரத்தை தகர்த்து ரூ.16 இலட்சம் கொள்ளையடித்து சென்ற சம்பவம் நடந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே, சிம்பாளி கிராமத்தில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம் உள்ளது. நேற்று நள்ளிரவு நேரத்தில் ஏ.டி.எம் மையத்திற்குள் புகுந்த கொள்ளையர்கள், இயந்திரத்தை வெடிபொருள் மூலமாக தகர்த்துள்ளனர்.
பின்னர், அதில் இருந்த ரூ.16 இலட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்ற நிலையில், ஏ.டி.எம் இயந்திரத்தின் பாகத்தினை அப்பகுதியில் வீசிவிட்டு சென்றுள்ளனர். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், மூன்று கொள்ளையர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது உறுதியானது. கொள்ளையர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.