மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஷார்ட்ஸ் அணிந்து சென்றது குத்தமா?.. 2 சிறுமிகளை கதறக்கதற., குடும்பமாக 6 பேர் வெறிச்செயல்.!
தொடையளவு உள்ள ஆடையை அணிந்து வெளியே சென்றதால், தங்கும் விடுதியில் இருந்த 2 சிறுமிகள் மீது சம்பந்தமே இல்லாத குடும்பத்தினர் கண்மூடித்தனமாக தாக்கிய சம்பவம் நடந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே மாவட்டம், கர்டி ரக்சா நகரில் தனியாருக்கு சொந்தமான பெண்கள் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் வேலைக்கு செல்லும், கல்லூரியில் பயின்று வரும் பல்வேறு சிறுமிகள் மற்றும் இளம்பெண்கள் தங்கி இருக்கிறார்கள்.
இந்நிலையில், இந்த விடுதியில் தங்கியிருந்த 2 சிறுமிகள், சட்டை மற்றும் ஷார்ட்ஸ் அணிந்துகொண்டு கடைக்கு சென்றதாக தெரியவருகிறது. அப்போது, அதே பகுதியில் வசித்து வரும் 6 பேர் கொண்ட குடும்பத்தினர், சிறுமிகளை அழைத்து எதற்காக ஷாட்ஸ் அணிந்து வந்தீர்கள்? என்று கேட்டு தாக்கி இருக்கின்றனர்.
மேலும், நீங்கள் இதற்கு மேல் தங்கும் விடுதியில் இருக்க கூடாது, அவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என தங்கும் விடுதி நிர்வாகத்தினருக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, சிறுமிகளின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஷார்ட்ஸ் அணிந்து சென்றதற்காக 2 சிறுமிகள் தாக்கப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.