மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இளம் மனைவி, பச்சிளம் குழந்தைகளை கிரிக்கெட் போட்டால் அடித்தே கொன்ற கணவர்: நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே பகுதியை சேர்ந்தவர், தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளை கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது. குற்றவாளி அமித் பகிடி (வயது 29) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் தனது மனைவி பாவனா (வயது 24), குழந்தைகள் அங்குஷ் (வயது 8), குஷி (வயது 6) ஆகியோரை கொலை செய்துள்ளார். கடந்த 21ம் தேதி கொலை விகாஸ் பகிடி தனது அண்ணி மற்றும் அவரின் குழந்தைகள் கொலை செய்யப்பட்டு வீட்டில் சடலமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின் இது தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் அம்பலமானது. அதாவது, அமித்தின் மனைவி மற்றும் குழந்தைகள் இருவரும் கிரிக்கெட் போட்டால் அடித்தே கொலை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.
கொலைகளை செய்த அமித் தலைமறைவாகியிருக்கிறார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னதாக தம்பதிகள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த நிலையில், விகாஷ் தனது அண்ணியின் வாழ்வாதாரத்திற்கு தேவையான சிறுசிறு உதவிகளை செய்து வந்துள்ளார். இதனை பயன்படுத்தி பாவனா வாழ்க்கையை குழந்தைகளுடன் நகர்த்தி இருக்கிறார்.
இதனிடையே, மனைவியிடம் அவ்வப்போது நேரில் சந்தித்து தகராறு செய்து வந்த அமித், சம்பவத்தன்று வீட்டில் புகுந்து கொடூரத்தை அரங்கேற்றி தப்பி சென்றுள்ளார். விகாஷின் புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவான குற்றவாளிக்கும் வலைவீசப்பட்டுள்ளது. அவர் கைதானால் மட்டுமே குற்றத்திற்கான காரணம் தெரியவரும்.