மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மனைவியின் குரலை கேட்டதும் தூக்கில் தொங்கிய கணவன்; காரணம் என்ன? கலங்கவைக்கும் சோகம்.!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டத்தை சேர்ந்தவர் சுதாகர் யாதவ் (வயது 41). இவரின் மனைவி சஞ்சனா யாதவ் (வயது 31). தம்பதிகளுக்கு கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்னதாக தம்பதிகளுக்கு இடையே குடும்பச்சண்டை நடந்துள்ளது. இதனால் சுதாகர் தனது அக்காவின் வீட்டிற்கு சென்று 2 நாட்களாக தங்கி இருந்துள்ளார்.
நேற்று வேலைக்கு புறப்பட்டு சென்ற சுதாகர், தனது மனைவிக்கு போனில் தொடர்பு கொண்டு உனது குரலை 2 நிமிடம் கேட்க வேண்டும் என பேசிவிட்டு அழைப்பை துண்டித்துள்ளார். கணவரின் எண்ணம் புரியாத மனைவியும் பேசி இருக்கிறார்.
அழைப்பை துண்டித்த கணவர், சில நிமிடங்களில் வாட்ஸப்பில் தான் தற்கொலை செய்யப்போகும் புகைப்படத்தை அனுப்பி வைத்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெண்மணி, தனது கணவரின் அக்கா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
உடனடியாக அவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, அங்கு சுதாகர் சடலமாக தொங்கியது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து காவல் துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. சுதாகரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.