கல்விக்கட்டண பிரச்சனையில் பெற்றோரை அடித்துவிரட்டும் தனியார் பள்ளி.. அதிர்ச்சி செயலால் பரபரப்பு.!



Maharashtra Pune ICSE Kline Memorial School Attacks Parents about Fees Issue

தனியார் பள்ளியில் கல்விக்கட்டணம் செலுத்தும் பிரச்சனையில், கோரிக்கை வைக்க சென்ற பெற்றோரின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே, பிப்வேவாடி பகுதியில் Kline Memorial School (ICSE) என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயின்று வரும் மாணவர்களிடம் பள்ளி நிர்வாகம் கல்விக்கட்டணம் கேட்டுள்ளது. 

பெற்றோர்கள் சார்பில் கட்டணத்தில் சலுகை வழங்க வேண்டும் அல்லது தவணை வேண்டும் எனவும், கொரோனாவால் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதனை பள்ளி நிர்வாகம் ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளது. 

சம்பவத்தன்று இந்த விஷயம் தொடர்பாக பேசுவதற்கு பள்ளிக்கு சென்ற பெற்றோர்களை, பள்ளி நிர்வாகம் ஏற்பாடு செய்து வைத்திருந்த பவுன்சர்கள் தாக்கி இருக்கின்றனர். மேலும், நிகழ்விடத்தில் இருந்த பெண் பவுன்சர் பெற்றோரரை தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

இந்த விஷயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெற்றோர் மங்கேஷ் கெய்க்வாட் பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.