திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இடிந்து விழுந்த 5 மாடி கட்டிடம்... பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு.!
மஹாராஷ்டிரா மாநிலம் ராய்கட் மாவட்டம் மஹட் பகுதியில் அமைத்துள்ள கர்கான் மொஹாலா என்ற இடத்தில் அமைந்திருந்த 5 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து தரைமட்டமாகியுள்ளது. 47 குடியிருப்புகளைக் கொண்ட அந்த கட்டிடத்தில் சுமார் 250 பேர் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த கட்டிடம் 2011 ஆம் ஆண்டு பன்வெலின் கோஹினூர் டெவலப்பர்களால் கட்டப்பட்டது என தெரியவந்துள்ளது.இந்த திடீர் விபத்தில் கட்டிடத்தில் இருந்த 200க்கும் மேற்பட்டோர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்பட்டது. நேற்று நிலவரப்படி 14 பேர் இடிப்பாடுகளில் சிக்கி உயிரிழந்ததாக தகவல் வெளியானது.
3 வது நாளாக தேசிய மீட்டுப்படையினர் மற்றும் மாநில மீட்பு படையினர் தொடர்ந்து மீட்புப்பணியில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 8 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். மற்றவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.