மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வளைவில் அதிவேகமாக திரும்பி கரப்பான்பூச்சி போல தலைகுப்புற கவிழ்ந்த பேருந்து; 2 பேர் பலி., 55 பேர் படுகாயம்.!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ராய்காட் மாவட்டம், மான்கன் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் இன்று காலை 07:30 மணியவில் நடந்த விபத்தில் இருவர் பரிதாபமாக பலியாகினர். 55 பேர் படுகாயம் அடைந்தனர்.
அம்மாவட்டத்தின் தம்மணி காட் பகுதியில், தனியார் பேருந்து வளைவு பகுதியில் வேகத்துடன் திரும்பும் போது விபத்து ஏற்பட்டுள்ளது. வளைவில் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த இரண்டு பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், காயமடைந்த 55 நபர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர்.
இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.