மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Breaking: மூத்த அரசியல் தலைவர், முன்னாள் முதல்வர் மனோகர் ஜோஷி மாரடைப்பால் காலமானார்; சோகத்தில் தொண்டர்கள்.!
மகாராஷ்டிரா மாநிலம், சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் மனோகர் ஜோஷி. இவர் அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் ஆவார்.
கடந்த 1995 - 1999 ம் ஆண்டு வரை அம்மாநிலத்தின் முதல்வராகவும், வாஜ்பாயின் தலைமையிலான மத்திய ஆட்சியில் 2002 - 2004 வரை மக்களவை சபாநாயகராகவும் பணியாற்றி இருக்கிறார்.
மராட்டிய மாநிலத்தில் மூத்த அரசியல்வாதியாக இருந்து வந்த மனோகர் ஜோஷி, கடந்த சில மாதங்களாகவே வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு இருந்தார்.
இந்நிலையில், மனோகர் ஜோஷி தனது 87 வது வயதில் மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தினார். அவரின் உயிர் மருத்துவமனையில் இன்று காலை 3 மணியளவில் பிரிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவரின் மறைவு அவரது தொண்டர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பல அரசியல் இயக்கங்களின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள், அஞ்சலி செலுத்த அவரின் வீட்டிற்கு விரைந்துள்ளனர்.