மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குடிசை மாற்று வாரியத்தில் ரூ.7,500 கோடி மோசடி.. முன்னாள் அமைச்சர் மீது ஆளுங்கட்சி பரபரப்பு புகார்..!
குடிசை மாற்று வாரிய திட்டத்தில் கோடிக்கணக்கில் முன்னாள் அமைச்சர் ஊழல் செய்திருப்பதாக பரபரப்பு புகார் முன்வைக்கப்பட்டுள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலத்தின் ஆளும்கட்சியான சிவசேனாவின் தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத் எம்.பி., பாஜக தலைவர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசி வருகிறார். மேலும், செய்தியாளர்கள் சந்திப்பின் போது மாநில தகவல் தொழில்நுட்ப கழகத்தில் ரூ.25 ஆயிரம் கோடி ஊழல் நடந்ததாகவும் தெரிவித்து அதிர்ச்சியை அளித்தார்.
இதனைப்போல, பாஜக தலைவர் கிரித் சோமையா மற்றும் அவரின் மகன் நீல் சோமையா ஆகியோர் பி.எம்.சி வங்கி ஊழலில் தொடர்புடைய நபர்கள் என்றும் குற்றசாட்டை முன்வைத்து இருந்தார். இந்நிலையில், நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், குடிசை மாற்று வாரியத்தில் நடந்த ஊழல் தொடர்பாக புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், "பாவாய் குடிசை மாற்று வாரிய மேம்பாடு திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. முன்னாள் எம்.பி கிரித் சோமையாவிற்கும் இதில் தொடர்பு உள்ளது. என்னிடம் லாரி நிறைய ஆதாரம் உள்ளது. பெருபாக் குடிசைப்பகுதியில் 138 ஏக்கர் நிலம் குடிசை மேம்பாட்டுக்கு கையகப்படுத்தப்பட்ட நிலையில், இவற்றில் 433 போலி பயனாளிகள் உள்ளார்கள்.
அன்றைய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் திட்டத்திற்கு அனுமதி வழங்கிய நிலையில், ஒவ்வொரு போலி பயனாளியிடம் இருந்தும் ரூ.25 இலட்சம் பெறப்பட்டுள்ளது. இதனால் குடிசைப்பகுதி மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். இதன் வாயிலாக ரூ.7 ஆயிரத்து 500 கோடியை சோமையா மோசடி வழியில் சம்பாதித்துள்ளனர். இந்த மோசடி ஒப்பந்தம் அன்றைய முதல்வருக்கு தெரியாது என்பது தான் சோகம்" என்று தெரிவித்தார்.