அட இந்த ஐடியா கூட நல்லா இருக்கே.. சமூக இடைவெளியை பின்பற்ற கடைக்காரர் எடுத்த புதிய முயற்சி.! வைரலாகும் வீடியோ.



maharashtra-shopkeeper-idea-for-social-distancing-with-customers

இந்தியாவில் கொரோன வைரஸ் கோர தாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் மக்கள் எப்போதும் முன்னெச்சரிக்கையுடன் இருக்கவும், சமூக இடைவெளியை பின்பற்றவும், முககவசம் அணியவும் வழியுறுத்தப்பட்டு வருகின்றனர். 

மேலும் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை வாங்கும் போது மக்கள் கூட்டம் கூட்டமாக வாங்காமல் சமூக இடைவெளியை பின்பற்றி பொருட்களை வாங்கி செல்லுமாறு அரசு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கடைக்காரர் ஒருவர் சமூக இடைவெளியை பின்பற்ற புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும் கடைக்காரரின் புதிய முயற்சியை பாராட்டி வருகின்றனர். அதாவது 
பிளாஸ்டிக் பாத்திரம் ஒன்றை, சைக்கிள் வீல் மற்றும் அதனுடன் கப்பியை இணைத்து மேஜை போன்று உருவாக்கியுள்ளார். 


அவர் அதிலுள்ள பெடலை மிதிக்கும் போது அந்த பாத்திரம் சற்று தூரத்தில் நிற்கும் வாடிக்கையளரிடம் சென்றடையும். அப்போது வாடிக்கையாளர் காசினை அந்த பாத்திரத்தில் வைத்து தங்கள் பொருட்களை எடுத்துக் கொள்வர்.

அதன்பின் வாடிக்கையளர்கள் தரும் பணத்தை சானிடைசர் மூலம் சுத்தம் செய்து, வெயிலில் இரண்டு நாட்கள் காய வைத்து விட்டு கிருமிகள் அழிந்த பின்னர் தான் அதனை பயன்படுத்தி கொள்கிறார் அந்த கடைக்காரர்.