திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
12 வயது சிறுமி பொதுகழிவறையில் பாலியல் பலாத்காரம்.. பட்டப்பகலில் நடந்த பேரதிர்ச்சி சம்பவம்.!
இயற்கை உபாதையை கழிக்க பொதுக்கழிவறைக்கு சென்ற சிறுமி, மர்ம நபரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பேரதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகரில், புனே இரயில் நிலையத்தில் இருந்து மலதாக்கா சவுக் பகுதி வழியாக கடந்த வெள்ளிக்கிழமை 12 வயது சிறுமி நடந்து சென்றுள்ளார். இவருக்கு இயற்கை உபாதை ஏற்படவே, அங்குள்ள பொதுக்கழிவறையில் அதனை கழிக்க சென்றுள்ளார்.
இந்நிலையில், சிறுமியை பின்தொடர்ந்து சென்ற காமுகன் ஒருவன், அவரை கழிவறையில் வைத்து கத்தி முனையில் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். மேலும், இதுகுறித்து வெளியே தெரிவித்தால் கொலை செய்திடுவேன் எனவும் மிரட்டி அனுப்பி வைத்துள்ளான்.
அப்போது, சிறுமி பெண்கள் பாதுகாப்பு தொடர்பான செயலியை இயக்கிவிடவே, அவரின் குடும்பத்தாருக்கு எச்சரிக்கை தெரிவிக்கப்பட்டு அவர்கள் விரைந்து சென்று மகளுக்கு பிரச்சனை என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் சிறுமியிடம் விசாரணை நடத்தியதில் பகீர் சம்பவம் தெரியவந்துள்ளது.
சிறுமி கூறிய அடையாளத்தின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவன் அப்பகுதியில் வீதியில் தங்கியிருந்து வரும் நடுத்தர வயதுடைய இளைஞர் என்பது அம்பலமானது. தலைமறைவாகியுள்ள காமுகனுக்கு வலை வீசப்பட்டுள்ளது.