திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்.. விலையுயர்ந்த சாக்லேட் கொடுப்பதாக அழைத்துச்சென்று பயங்கரம்.! 3 குழந்தை காமுகனின் வெறிச்செயல்.!
விலைஉயர்ந்த சாக்லேட் கொடுப்பதாக சிறுமிக்கு அசைவார்த்தைக்கூறி தன்னுடன் அழைத்து சென்ற காமுகன், அவரை பாலியல் பலாத்காரம் செய்த துயரம் அடைந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே, கல்வா சாந்தி நகரை சேர்ந்த 16 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் பதினோராம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் வசித்து வரும் குடிசைப்பகுதியின் மற்றொரு தெருவில், 37 வயதுடைய ஸ்ரீகாந்த் கெய்க்கே என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த மார்ச் 6 ஆம் தேதியன்று 16 வயது சிறுமிக்கு விலையுயர்ந்த சாக்லேட் கொடுப்பதாக ஏமாற்றிய கயவன், அவரை ஒதுக்குபுறமான இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். மேலும், இதுகுறித்து வெளியே கூறினால் கொலை செய்திடுவேன் என்றும் மிரட்டி இருக்கிறான்.
இதனால் பயந்துபோன சிறுமியும் தனக்கு நடந்த கொடுமை குறித்து வெளியே தெரிவிக்காமல் இருந்த நிலையில், கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளார். பின்னர், 1098 என்ற குழந்தைகள் நல அமைப்பினருக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, சிறுமியிடம் ரகசிய விசாரணை மேற்கொண்ட குழந்தைகள் நலத்துறையினர், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், ஸ்ரீகாந்த் கெய்க்கேவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.