கட்சி துவங்கியது முதல், எங்கே சென்றாலும் அதை செய்யும் விஜய்.! ஆச்சரியத்தில் தொண்டர்கள்.!
24 வயதுடைய பெண்ணின் கருப்பையில் இருந்த 2.5 கிலோ கட்டியை வெற்றிகரமாக அகற்றிய மருத்துவர்கள்: மாதவிடாய் தள்ளிப்போனால் உஷார்.!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே, உல்ஹஷ் நகர் பகுதியை சேர்ந்தவர் ஆர்த்தி (வயது 24). இவருக்கு சம்பவத்தன்று (நவ.23) கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அவரை குடும்பத்தினர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர்.
முதற்கட்ட சிகிச்சையில் பெண்ணுக்கு வலி குறைந்தாலும், தொடர்ந்து இருக்கிறது. இதனால் பெண்மணி வயிற்று வலியால் துடித்துக்கொண்டு இருந்துள்ளார்.
இதனையடுத்து, பெண்ணுக்கு ஸ்கேன் செய்து பார்த்தபோது கருப்பையில் கட்டி இருந்தது தெரியவந்துள்ளது. கருப்பையில் இருக்கும் கட்டியை அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் வெளியே எடுக்க முடிவெடுத்துள்ளனர்.
அதன்படி, பெண்ணுக்கு அறுவை சிகிச்சை வாயிலாக, கருப்பையில் இருந்த 2.5 கிலோ அளவிலான கட்டி அகற்றப்பட்டது. கிட்டத்தட்ட 3 மணிநேரம் தொடர் அறுவை சிகிச்சை நடைபெற்றதையடுத்து, கட்டி வெற்றிகரமாக அகற்றப்பட்டு இருக்கிறது.
இந்த விஷயம் தொடர்பான தகவலை தற்போது தெரிவித்துள்ள மருத்துவர்கள், சம்பந்தப்பட்ட பெண்மணி நல்ல உடல்நலத்துடன் இருப்பதாகவும், அவரின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருவதாகவும் கூறினர்.
முதலில் கடந்த 3 மாதங்களுக்கு முன்னதாகவே பெண்ணுக்கு வயிற்றில் கட்டி தொடர்பான பிரச்சனையின் அறிகுறியாக மாதவிடாய் வரவில்லை. தான் கர்ப்பமாக இருக்கலாம் என எண்ணிய பெண்மணி, அதற்கான சோதனையை வீட்டில் செய்துள்ளார்.
அதில் கர்ப்பம் உறுதி செய்யப்படவில்லை என்பதால், பிற உடல்நல கோளாறு காரணமாக மாதவிடாய் வராமல் தள்ளிச்சென்று இருக்கும். பிரதி மாதம் சரியாகிவிடும் என நினைத்துள்ளார். இறுதியில் அது கருப்பையில் கட்டியாக இருந்துள்ளது.
அதேபோல, பெண்கள் மாதவிடாய் தள்ளிப்போகிறது என்றால் கருத்தரிக்க வாய்ப்பு இருக்கலாம் என்று சுயமாக நினைத்து செயல்பட வேண்டாம். மருத்துவரை அணுகவும் அவர்கள் அறிவுறுத்துகின்றனர்.