மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயற்சித்த சிறுவன்.. தெய்வமாய் வந்து காப்பாற்றிய அதிகாரி.. பதைபதைப்பு வீடியோ.!
இரயில் வரும் நேரத்தில் தற்கொலைக்கு முயற்சித்த சிறுவனை இரயில்வே பாதுகாப்பு படை அதிகாரி நொடிப்பொழுதில் காப்பாற்றிய வீடியோ வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டம், விட்டல்வாடி இரயில் நிலையத்தில், 16 வயது சிறுவன் தண்டவாளம் அருகே நின்று கொண்டு இருந்தார். அப்போது, சிறுவன் நின்ற நடைமேடை வழியே அதிவிரைவு இரயில் செல்லவிருந்த நிலையில், இரயில் தன்னருகே வரும்போது யாரும் எதிர்பாராத வேலையில் தற்கொலைக்கு முயற்சித்து இருக்கிறான்.
நிகழ்விடத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த இரயில்வே பாதுகாப்பு படை அதிகாரி, சிறுவனை நடைமேடையில் இருந்து தள்ளிவருமாறு கூறிய நிலையில், தற்கொலை எண்ணத்தில் இருந்தவன் தண்டவாளத்தில் குதித்து இருக்கிறான். இதனைக்கண்டு பதறிப்போன அதிகாரி, சுதாரிப்புடன் செயல்பட்டு சிறுவனை தண்டவாளத்தில் இருந்து தள்ளிவிட்டு உயிரை காப்பாற்றினார்.
#WATCH | Maharashtra: A police personnel saved a teenage boy's life by pushing him away from the railway track just seconds before an express train crossed the spot at Vitthalwadi railway station in Thane district. (23.03)
— ANI (@ANI) March 23, 2022
Video Source: Western Railway pic.twitter.com/uVQmU798Zg
இரயில் தண்டவாளத்தில் இருந்து சிறுவனை காப்பாற்றிய அடுத்த நொடியே இரயில் சிறுவன் நின்றுகொண்டு இருந்த இடத்தை கடந்து சென்றது. இதனால் நொடிப்பொழுதில் சிறுவனின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று நடைபெற்ற நிலையில், அதன் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், சிறுவனின் உயிரை காப்பாற்றிய அதிகரிக்கும் பாராட்டுக்கள் குவிகின்றன.