மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அன்பு மனைவியை காருக்குள் கதறக்கதற பறிகொடுத்த கணவன்; தீயில் எரிந்து கருகிய உடல்.!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஜல்னா மாவட்டத்தில் வசித்து வருபவர் அமோல். இவரின் மனைவி சவிதா (வயது 32). தம்பதிகள் நேற்று காரில் சென்றுகொண்டிருந்த நிலையில், அங்குள்ள கர்லா கிராமம் அருகே வந்தபோது காரின் மீது வேன் மோதி விபத்து ஏற்பட்டது.
காரில் இருந்து அவசர கதியில் இறங்கிய அமோல், விபத்தை ஏற்படுத்திய வேன் ஓட்டுனரை கண்டிக்க விரைந்து சென்றுள்ளார். அச்சமயம் காரில் திடீரென தீ பற்றி ஏரியவே, அதிர்ந்துபோன அமோல் மனைவியை மீட்க முயற்சித்தார்.
ஆனால், தீ காருக்குள் மளமளவென பரவியதால் சவிதவை மீட்க இயலவில்லை. பின் இதுகுறித்து தீயணைப்பு & மீட்பு படையினருக்கும், காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகள் விரைவதற்குள் சவிதா தீயில் கருகி காணார் கண்முன் பரிதாபமாக பலியாகினர்.
அன்பு மனைவியை கார் தீ விபத்தில் கண்முன் பலிகொடுத்த கணவர் சாலையில் அழுது புரண்டது காண்போரை சோகத்திற்கு உள்ளாகியது. அதிகாரிகள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்து சவீதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மனைவியை காப்பாற்றும் முயற்சியில் இறங்கிய அமோல் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டார்.