மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
சூப்பர் மேடம்!! மேற்குவங்க மாநிலத்தின் முதல்வராக 3வது முறையாக பதவியேற்றார் மம்தா பானர்ஜி
மேற்கு வங்க மாநிலத்தின் முதல்வராக 3வது முறையாக மம்தா பானர்ஜி பதவியேற்றார்.
மேற்குவங்கத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றது. 213 இடங்களில் வெற்றிபெற்ற திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி மேற்குவங்கத்தில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைகிறது.
66 வயதாகும் மம்தா பானர்ஜி காலில் காயமடைந்த நிலையிலும் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு நடந்து முடிந்த தேர்தலில் சந்தித்து வெற்றி பெற்றுள்ளார்.
ஆனாலும் தான் போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் தோல்வியை சந்தித்த மம்தா பானர்ஜி, திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களால் கட்சியின் சட்டசபை தலைவராக தேர்வு செய்யப்பட்டு இன்று முதல்வராக பதவியேற்றார். தான் நின்ற தொகுதியில் தோல்வியை சந்தித்த மம்தா பதவியேற்ற 6 மாத காலத்துக்குள் ஒரு தொகுதியில் நின்று வெற்றி பெற வேண்டும்.
இதேபோல் கடந்த 2011 இல் மம்தா பானர்ஜி பதவியேற்றபோதும் அவர் எம்எல்ஏ-வாக இல்லை. பின்னர் போவானிபூர் தொகுதியில் போட்டியிட்டு மம்தா பானர்ஜி வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.