மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நான் இங்கே கோல் கீப்பர்.! நீங்கள் எத்தனை கோல் அடிப்பீர்கள்.? அமித்ஷாவுக்கு சவால் விடுத்த மம்தா பானர்ஜி.!
தைரியம் இருந்தால் மேற்குவங்கத்தில் போட்டியிடுங்கள் என அமித்ஷாவுக்கு மம்தா சவால் விடுத்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் அடிக்கடி மேற்கு வங்க மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தைரியம் இருந்தால் மேற்கு வங்க தேர்தலில் அமித் ஷா போட்டியிடட்டும். ஒருவேளை அவர் வெற்றி பெற்றால், அவரை நான் அமைச்சர் ஆக்குகிறேன் என்று சவால் விடுத்துள்ளார்.
Let's have a fair play. You can fight with Left & Congress in your team, we will fight alone. I will only be a goalkeeper and see how many goals you can kick: West Bengal Chief Minister Mamata Banerjee in Kolkata https://t.co/ikJyeaTfHU
— ANI (@ANI) February 11, 2021
என்னை துஷ்பிரயோகம் செய்யலாம். ஆனால், உங்களால் என்னை புறக்கணிக்க முடியாது. விவசாயிகளை கொள்ளையடித்த பிறகு, என்னுடைய மதத்தை நான் பின்பற்ற அனுமதிக்காத நிலைக்குப் பிறகு, கலவரம் செய்து,பெங்காலை விரும்புகிறீர்களா?. இதுபோன்ற மக்களுக்கு நான் அடிபணியமாட்டேன். என தெரிவித்துள்ளார்.
நியாயமான விளையாட்டை விளையாடலாம். நீங்கள் இடது சாரி, காங்கிரசுடன் உங்கள் அணியுடன் விளையாடலாம். நான் தனியாக போட்டியிடுவேன். நான் கோல் கீப்பராக மட்டுமே இருப்பேன். எத்தனை கோல்கள் அடிக்கிறீர்கள் என்று பார்க்கலாம் என சவால் விடுத்துள்ளார்.