#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கொரோனோ பீதி! பொது இடத்தில் தும்மியவருக்கு நேர்ந்த கதியை பார்த்தீர்களா! வைரலாகும் வீடியோ!
சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது 150க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் அதிதீவிரமாக பரவி வருகிறது. இதனால் உலக நாடுகள் பலவும் பெரும் அச்சத்தில் மூழ்கியுள்ளது.
இந்நிலையில் இந்தியாவில்u தற்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 172 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பள்ளிகள் கல்லூரிகள், வணிக வளாகங்கள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்கள் ஆகியவற்றை மூட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் மக்கள் அடிக்கடி கை கழுவவும், சுத்தமாக இருக்கவும் தங்கள் இருக்கும் இடங்களை தூய்மையாக வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பொது இடங்களில் மக்கள் யாராவது தும்மினாலோ, இருமினாலோ சுற்றி இருப்பவர்கள் அவருக்கு கொரோனோவாக இருக்கலாமோ என அச்சுறும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மராட்டிய மாநிலம் கோலாப்பூரில் இளைஞர் ஒருவர் பொது இடத்தில் வாயில் கை வைக்காமல் தும்மியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அங்கிருந்த மக்கள் அவரை சரமாரியாக அடித்து தாக்கியுள்ளனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது.
#Breaking | WATCH: Corona scare triggers panic. A man allegedly thrashed in Kolhapur, Maharashtra, for allegedly sneezing in public.
— TIMES NOW (@TimesNow) March 19, 2020
Aruneel with details. pic.twitter.com/3L773rURKp