குழந்தைகள் முன்னேற்ற கழகம் - படத்தின் ட்ரைலர் வெளியீடு.! லிங்க் உள்ளே.!
திருமணம் முடிந்த உடனே அதிகரித்த மனைவியின் ஆசை!! நச்சரித்த மனைவியின் தேவையை நிறைவேற்ற கணவன் போட்ட பிளான்..!
மனைவியின் பணத்தேவையை பூர்த்தி செய்ய, திருடனாக மாறிய இளைஞரை போலீசார் கைதுசெய்துள்ளனர்.
புனேவை சேர்ந்தவர் சவுரப் யாதவ் (20). தனியார் நிறுவனம் ஒன்றில் டெலிவரி பாயாக வேலைபார்த்துவரும் இவருக்கு சமீபத்தில் திருமணம் முடிந்துள்ளது. திருமணம் முடிந்த நாளில் இருந்தே, தனது கணவன் சம்பாதிக்கும் வருமானம் போதவில்லை எனவும், இவ்வளவு குறைவாக சம்பாதிக்கும் நீங்கள், ஏன் என்னை திருமணம் செய்துகொண்டீர்கள் எனவும் கூறி, சவுரப்பின் மனைவி தொடர்ந்து அவருடன் சண்டைபோடுவந்துள்ளார்.
இதனால் மனவேதனை அடைந்த சவுரப், தனது மனைவியின் பணத்தேவையை பூர்த்தி செய்வதற்காக திருடனாக மாறியுள்ளார். யூடியூப்பில் வரும் செயின் பறிப்பு காணொளிகளை பார்த்து, செய்யின் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
ஒருநாள் வகாட் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, சவுரப் யாதவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு, அவரை கூப்பிட்டு விசாரித்ததில் அவர் அந்த பகுதியில் செய்யின் பறிப்பில் ஈடுபட்டுவந்தது தெரியவந்தது. பின்னர் அவரிடம் இருந்து 121 கிராம் தங்க நகைகள் மற்றும் அவரது இருசக்கர வாகனத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
மேலும் சவுரப் யாதவின் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மனைவியின் பேராசையால் சவுரப் யாதவ் திருடனாக மாறி, தற்போது ஜெயிலில் கம்பி எண்ணுகிறார்.