#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடக்கொடுமையே! இதெல்லாம் ஒரு சவாலா? முட்டை சாப்பிட்டவர் திடீர் மரணம்! வெளியான பகீர் சம்பவம்!!
உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூர் மாவட்டம் ஷாகஞ்ச் கோட்வாலி பகுதியில் வசித்து வந்தவர் சுபாஷ் யாதவ். இவர் லாரி டிரைவராக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சுபாஷ் பிபிகஞ்ச் மார்க்கெட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அவர் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது வித்தியாசமான பந்தயம் ஒன்றை கட்டியுள்ளனர்.
அதாவது ஒரு பாட்டில் மதுவுடன் 50 முட்டைகளை சாப்பிட வேண்டும் என சவால் விடுத்துள்ளனர். மேலும் அவ்வாறு சாப்பிட்டால் 2000 ரூபாய் தருவதாகவும் கூறியுள்ளனர். மேலும் 250 ரூபாயை முன்பணமாக கொடுத்துள்ளனர். இந்நிலையில் சுபாஷும் சவாலை ஏற்றுக்கொண்டு கடையின் முன் அமர்ந்து முட்டையை உடைத்து குடித்துள்ளார். மேலும் மதுவையும் குடித்துள்ளார்.
இவ்வாறு அவர் 42 முட்டைகளை சாப்பிட்ட பின்பு திடீரென மயங்கி விழுந்துள்ளார். இந்நிலையில் பதறிப்போன அவரது நண்பர்கள் அந்த நபரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.