மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
விபத்தில் சிக்கி சாலை ஓரம் கிடந்த நாயின் இறைச்சியை பிய்த்து எடுத்து சாப்பிட்ட நபர்..! பதற வைக்கும் அதிர்ச்சி வீடியோ.!
பசிக்கொடுமையால் ரோட்டில் இறந்துகிடந்த நாயின் மாமிசத்தை நபர் ஒருவர் சாப்பிட்ட சம்பவம் வீடியோவாக வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா காரணமாக பெரும்பாலான நாடுகளில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தியாவிலும் நான்கு கட்டமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு வரும் மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவால் பலர் வேலை இழந்த நிலையில், ஒருநேர சாப்பாட்டிற்கே சிரமப்படும் சூழல் உருவாகியுள்ளது.
அதேநேரம், வெளிமாநிலங்களில் சிக்கிக்கொண்ட புலம்பெயர் தொழிலார்கள் தங்கள் சொந்த ஊருக்கு நடந்தே செல்கின்றனர். இதனால் வழியில் சாப்பாடு கிடைக்காமல் இறக்கும் சம்பவங்களும் நடந்தேறிவருகிறது. இந்நிலையில், டெல்லியில் இருந்து ஜெய்ப்பூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த நபர் ஒருவர் பசியின் காரணமாக சாலையில் விபத்தில் சிக்கி இறந்துகிடந்த நாயின் மாமிசத்தை பிய்த்து சாப்பிட்டுள்ளார்.
இதனை அந்த வழியாக காரில் சென்ற நபர் ஒருவரை வீடியோ எடுத்ததோடு, அதனை சாப்பிடாதே என அறிவுறுத்தியுள்ளார். இருந்தும் பசியின் காரணமாக அந்த நபர் நாயின் மாமிசத்தை சாப்பிட்டநிலையில், காரில் வந்தவர் அந்த நபருக்கு உணவும் மற்றும் தண்ணீர் பாட்டில்களை வழங்கிய பிறகு அந்த நபர் நாயின் மாமிசத்தை சாப்பிடுவதை நிறுத்தியுள்ளார்.
தற்போது இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பார்ப்போரை கண்கலங்க வைத்துள்ளது.