திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இளைஞரை அடித்து, உதைத்து சிறுநீர் குடிக்கவைத்த கும்பல்! ஏன் தெரியுமா? வெளியான அதிர்ச்சி காரணம்!
ராஜஸ்தான் மாநிலத்தில் இளைஞர் ஒருவரை கும்பல் ஒன்று, அடித்து தாக்கி சிறுநீரை குடிக்க வைத்து துன்புறுத்தி வீடியோ எடுத்துள்ளனர். மேலும் இந்த வீடியோவை சமூகவலைத்தளத்தில் வெளியிட்ட அந்த கும்பல் அதனை ராஜஸ்தான் முதல்வர் மற்றும் முக்கிய அதிகாரிகள் சிலருக்கு டேக் செய்துள்ளனர்.
இந்த வீடியோ வைரலான நிலையில், மேலும் முதல்வரின் உத்தரவின் அடிப்படையில் போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். அப்பொழுது ராஜஸ்தான் மாநிலம், சிரோகி மாவட்டத்தில் பேவ் பலாடி என்ற கிராமத்தை சேர்ந்த இளைஞர் அடிக்கடி தனது மாமா வீட்டிற்கு சென்று வந்துள்ளார். அப்பொழுது அவருக்கு அதே பகுதியில் வசித்து வந்த திருமணமான பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்த கிராமத்தினருக்கு தெரியவந்த நிலையில், ஆத்திரமடைந்த கிராமத்தினர் சிலர் அந்த இளைஞரை கடத்தி சென்று, அவரை அடித்து உதைத்து சிறுநீர் குடிக்க வைத்து துன்புறுத்தியுள்ளனர். பிறகு அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர் என்பது தெரியவந்தது.
மேலும் இதுகுறித்து போலீசார் கூறுகையில், இதுவரை குற்றவாளிகள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் குற்றவாளிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளனர்.