ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
அடக்கடவுளே.. இப்படி கூட நடக்குமா?? சிரித்து ஜாலியாக மணமகனுக்கு மஞ்சள் பூசிய நபர்.! அந்த நொடியே நடந்த பெரும் சோகம்! ஷாக் வீடியோ!!
திருமணத்திற்கு முன் நடைபெறும் மஞ்சள் பூசும் விழாவில் மாப்பிள்ளைக்கு சிரித்தவரை ஜாலியாக மஞ்சள் பூசி கொண்டிருந்த உறவினர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத், தெலுங்கானா காலாபட்டாரில் திருமணத்திற்கு முன் நடைபெறும் மஞ்சள் பூசும் விழாவில் 40 வயது நிறைந்த முகமது ரப்பானி கலந்து கொண்டுள்ளார். மணமகனின் உறவினரான அவர் விழாவில் மணமகனுக்கு மஞ்சள் பூசியுள்ளார்.
அப்பொழுது அவர் மாப்பிள்ளையை கிண்டல் செய்தவாறே மிகவும் ஜாலியாக சிரித்தபடி மஞ்சள் பூசிக்கொண்டு இருந்துள்ளார். அப்பொழுது திடீரென அவர் மயங்கி சரிந்து விழுந்துள்ளார். இதனால் பதறிப்போன மாப்பிள்ளை மற்றும் அவரது உறவினர்கள் உடனே முகமது ரப்பானியை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
ஆனால் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் முகமது ரப்பானி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தால் திருமண வீடு பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது. மேலும் மஞ்சள் பூசு விழாவில் ஜாலியாக சிரித்து பேசிக் கொண்டிருந்த நபர் கண்ணிமைக்கும் நொடியில் சரிந்து விழுந்து உயிரிழந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பார்ப்போரை பதற வைக்கிறது.
Groom’s relative #DiedSuddenly at Haldi ceremony 💉👀 pic.twitter.com/HRNqiailD4
— JamaicanPattee 🧡✌️🧡 (@JamaicanPattee) February 23, 2023