மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
திடீரென கதவை தட்டிய கணவன்.! கையும் களவுமாக சிக்கிய கள்ளக்காதலனுக்கு நேர்ந்த கொடூரம்!!
திருப்பத்தூர், குரிசிலாப்பட்டு அருகேயுள்ள குண்டுரெட்டியூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் காளிதாஸ். இவர் ஓசூரில் கட்டட வேலை செய்து வந்துள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர் 35 வயதுமிக்க சரவணன். வேன் ஓட்டுனராக இருந்துள்ளார். சரவணன், காளிதாஸ் இருவரும் நண்பர்கள் என கூறப்படுகிறது. காளிதாசன் ஊரில் இருந்து வரும்போதெல்லாம் சரவணனுடன் சேர்ந்து வெளியே செல்வது, ஒன்றாக மது அருந்துவது என இருந்துள்ளார்.
நண்பன் மனைவுயுடன் தகாத உறவு
மேலும் அவரது வீட்டிற்கும் அடிக்கடி சென்று வந்த நிலையில் காளிதாஸ் மனைவி ரேவதிக்கும், சரவணனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு தகாத உறவாக மாறியுள்ளது. இது தெரியவந்த நிலையில் காளிதாஸ் சரவணனை பலமுறை எச்சரித்துள்ளார். ஆனால் அவர்கள் கேட்டபாடில்லை. மேலும் காளிதாஸ் ஓசூருக்கு வேலைக்கு சென்ற நிலையில் அவர்கள் இருவரும் சந்தித்து தனிமையில் இருந்து வந்துள்ளனர்.
இதையும் படிங்க: விளையாட சென்று வீடு திரும்பாத 3 சிறுவர்கள்.! தேடி அலைந்த பெற்றோருக்கு காத்திருந்த பேரிடி!!
தனிமையில் உல்லாசம்
அவ்வாறு நேற்று முன்தினமும் சரவணனும், ரேவதியும் வீட்டில் நெருக்கமாக இருந்துள்ளனர். இந்நிலையில் காளிதாஸ் எந்த முன் அறிவிப்புமின்றி திடீரென ஓசூரில் இருந்து ஊருக்கு வந்து வீட்டின் கதவை தட்டியுள்ளார். இந்த நிலையில் காளிதாஸ் வந்ததை அறிந்த சரவணன் வீட்டிற்குள் பீரோவுக்கு பின்பு ஒளிந்துள்ளார். ஆனால் ரேவதியின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த காளிதாஸ் வீடு முழுவதும் தேடிப்பார்த்து சரவணனை கண்டுபிடித்துள்ளார்.
உயிரிழந்த சரவணன்
பின் ஆத்திரமடைந்த அவர் ஜல்லிக்கரண்டி, பீர் பாட்டில் ஆகியவற்றால் சரவணனை கடுமையாக தாக்கியுள்ளார். இந்நிலையில் அங்கிருந்தவர்கள் பலத்த காயமடைந்த சரவணனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே சரவணன் உயிரிழந்தார். இதனை தொடர்ந்து போலீசார் காளிதாஸ் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க: பேரதிர்ச்சி.. பரிதாபமாக பறிபோன உயிர்கள்.! பெருந்துயரில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல்!!