மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அடக்கடவுளே... காதலியை தனிமையில் அழைத்து கழுத்தை அறுத்து கொலை செய்த காதலன்... நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்...
ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் தபஸ்தி. இவரின் பெற்றோர் மும்பையில் உள்ள நிலையில் விஜயவாடாவில் தாங்கி அங்கு உள்ள பல் மருத்துவக்கல்லூரி ஒன்றில் மருத்துவம் படித்து வந்துள்ளார். அந்த சமயத்தில் மணிகொண்டா பகுதியைச் சேர்ந்த என்ஜினியர் ஞானஸ்வரர் என்கிற வாலிபருடன் சமூக வலைத்தளம் மூலம் பழக்கம் ஏற்ப்பட்டுள்ளது.
நாளடைவில் அந்த பழக்கம் காதலாக மலர்ந்துள்ளது. சில மாதங்கள் காதலித்து வந்த நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஞானேஸ்வரருடன் பேசாமல் இருந்து வந்திருக்கிறார் தபஸ்வி. இருப்பினும் ஞானேஸ்வரர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
அதனையடுத்து தபஸ்வி இச்சம்பவம் குறித்து போலீசில் புகார் கொடுத்துள்ளார். போலீசார் ஞானேஸ்வரனை அழைத்து எச்சரித்து அனுப்பியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஞானேஸ்வரர் தபஸ்வியை தனிமையில் சந்தித்து பேசியுள்ளார்.
அப்போது தபஸ்தி தனக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடக்க இருப்பதாக கூறியுள்ளார். இதனை கேட்டு கோபமான ஞானேஸ்வரர் தான் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தால் தபஸ்வியை கொலை செய்துள்ளார். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.