திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கள்ளகாதலியுடன் உல்லாசம்.! அவர் கேட்ட அந்த வார்த்தையால் துடிதுடிக்க வாலிபர் செய்த பகீர் காரியம்!!
கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டம் மாதமங்கலம் பகுதியில் வசித்து வருபவர் அனிலா. 33 வயது நிறைந்த அவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அவருக்கு பள்ளி நண்பரான பிரசாத் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்நிலையில் பிரசாத்தின் நண்பரான ஜோசப் என்பவர் குடும்பத்தினருடன் ஒரு வாரத்திற்கு முன் சுற்றுலா சென்ற நிலையில் தனது வீட்டை பார்த்துகொள்ள கூறியுள்ளார்.
கள்ளக்காதலனுடன் உல்லாசம்
மேலும் அங்கேயே தங்குமாறு சாவியும் கொடுத்து சென்றுள்ளார். இந்த நிலையில் கடந்த 3 ஆம் தேதி அங்கு அனிலா வந்துள்ளார். தொடர்ந்து பிரசாத் மற்றும் அனிலா இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்பொழுது அனிலா தனது கணவரை பிரிந்துவிட்டு பிரசாத்துடன் சேர்ந்து வாழ விரும்புவதாக கூறியுள்ளார். ஆனால் இதற்கு பிரசாத் மறுப்பு தெரிவித்தநிலையில் அவர்கள் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
கழுத்தை நெரித்து கொலை
இதில் ஆத்திரமடைந்த அவர் அனிலாவின் கழுத்தை துப்பட்டாவால் நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் அனிலாவின் உடலை அங்கேயே போட்டுவிட்டு அவர் தப்பியோடியுள்ளார். இதற்கிடையில் ஜோசப் பிரசாத்துக்கு பலமுறை போன் செய்தபோதும் அவர் பதிலளிக்காமல் இருந்துள்ளார். அதனால் சந்தேகமடைந்த அவர் பக்கத்து வீட்டிற்கு போன் செய்து தனது வீட்டிற்கு சென்று பார்க்குமாறு கூறியுள்ளார். அங்கு பெண்ணின் சடலம் கிடைப்பது கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனே போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தற்கொலை
சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் அனிலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் விசாரணை மேற்கொண்டு பிரசாத் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவர் அங்கு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு தொங்கியுள்ளார். பின் அவரது உடலையும் மீட்டு காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.