மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஊரடங்கால் 4 மாதங்களாக வாடகை வீட்டில் தங்கவில்லை.! வாடகை பங்கு கேட்டதால் ரூம்மேட்ஸ் இருவர் கொலை!
உலகத்தையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பல கட்டங்களாக ஊரடங்கு நீடிக்கப்பட்டு சில தளர்வுகளும் அளிக்கப்பட்டது.
இந்தநிலையில் மேற்கு டெல்லியின் ரகுபீர் நகரில் முகமது அஜாம், அமீர் ஹசன், ஜாஹீர் என்ற மூன்று நபர்கள் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்துள்ளனர். அந்த வீட்டிற்கு மாதம் ரூ.4 ஆயிரத்தை மூன்று நபர்களும் பகிர்ந்து கொடுத்து வந்துள்ளனர். ஆனால் ஊரடங்கு சமயத்தில் ஜாஹிர் என்பவர் அவரது சொந்த ஊருக்கு சென்றுவிட்டார்.
ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்ட பின் ஜாஹீர் மீண்டும் டெல்லியில் உள்ள வாடகை வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது 4 மாத வாடகை பங்கையும் தர வேண்டும் என்று முகமது அஜாம், அமீர் ஹசன் ஆகிய இருவரும் ஜாஹிரிடம் கேட்டுள்ளனர். ஆனால், 4 மாத காலமும் தான் வாடகை வீட்டில் இல்லை, தனது சொந்த ஊரில் இருந்ததால் வாடகை தர முடியாது என்று ஜாஹிர் மறுத்ததாக கூறப்படுகிறது.
ஆனால் அவர்கள் இருவரும் வாடகையை கட்டாயம் தரவேண்டும் என ஜாஹிரிடம் வற்புறுத்தியுள்ளனர். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த ஜாஹிர், வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து இருவரையும் வெட்டியுள்ளார். இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பின்னர் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார் ஜாஹிர். பின்னர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இருவரின் உடல்களை மீட்டு விசாரணை நடத்தினர். பின்னர் தலைமறைவாகியிருந்த ஜாஹிரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.